மாளட்டும் முஜாகிதீன் மூடமனம்

புண்ணியத் தலமாம் காசியம் பதியிலே

புனிதத் தாயாம் கங்கையின் மடியிலே

பக்தியோடு வழிபட்ட மாலைப் பொழுதிலே

பக்தரைக் காலன் கைக்கொண்டு போயினன்

குண்டுகள் வெடித்து குலமக்கள் மாண்டனர்

குற்றுயிர் தாங்கியோர் சிகிச்சைக்குப் போயினர்

கதறும் மக்களின் கண்ணீர் ஓடையில்

கங்கையும் சற்றே பெருகியே ஓடினாள்

உளவுக் கென்றொரு பிரிவினர் உண்டு

உள்ளம் எண்ணும் எண்ணம் அறியும்

தனியோர் திறமும் அவருக்கு  அதிகம்

தனிப்பெரும் அப்படை சொன்னது என்ன?

முஜாகிதீன் என்றொரு மூடக் குழுவினர்

முற்றிலும் மூளையைத் களைந்து நிற்பவர்

மாற்றான் பேச்சுக்கும் காசுக்கும் மயங்கினர்

மாநிலம் போற்றும் பாரதம் எரிக்கவே

சொன்னது கேட்டும் சும்மா யிருந்தால்

சொப்பன வாழ்வில் சுகமா யிருந்தால்

ஆவன செய்து நாட்டை நடாத்தும்

ஆள்வோர் ஆற்றும் கடமையும் என்ன?

கடுமையாய்க் கண்டித்தார் தலைவர் பெருமக்கள்

கடுஞ்சொல் பேசினார் அமைச்சர் திருமகனார்

கொடுமைக்கு நிறம்பூசும் சிதம்பரத் தமிழ்மகனார்

கொடுந்தொழிலர் வேறறுக்கப் பச்சைக்கொடி காட்டுவரோ!

கல்வி கேள்வியில் இடம் பெறவேண்டிய

கனவுகள் பலவும் கருகிய நிலையில்

இரண்டே வயதான குழந்தை ஒன்று

இறந்தவர் பட்டியலில் முதலிடம் கண்டது

காசியம் பதியிலே மாண்டால் புண்ணியமாம்

காணாமல் போகுமாம் கடுமையான பாவமும்

கபடத்தொழில் செய்யும் முஜாகிதீன் மூடத்தனம்

கங்கையொடு போகட்டும் மக்கள்நலம் வாழட்டும்!

Advertisements
Explore posts in the same categories: கவிதை

2 Comments on “மாளட்டும் முஜாகிதீன் மூடமனம்”


 1. மாளட்டும் முதலில் உங்கள் மண்டை கிறுக்கு.
  முதலில் தப்பிக்க யார் பெயரையாவது பயன்படுத்துவார்கள். அதை முதல் பக்கத்திலும் போடுவார்கள். உண்மை வெளிவந்த பின் ஏதாவது ஒரு பக்க மூலைக்குள் ஒதுக்குவார்கள்.
  சரியாக முடிவெடுக்கும் முன் சந்தேகம் உள்ளதற்கெல்லாம் யாரையும் குற்றம் சொல்லக் கூடாது.
  சிதம்பரனார் சொல்லிய நிறங்களில் இருந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத உங்கள் மனதின் நிறம் பளிச்…


  • பச்சைநிறத் தொருபூனை எங்கள்
   நாட்டில் வளருது கண்டீர்
   பிள்ளைகள் பெற்றதப் பூனை
   அவை பேருக்கொரு குணமாகும்

   அமைதியான சில குட்டிகள்
   அடங்காதன சில குட்டிகள்
   நட்பாயின சில குட்டிகள்
   பகைநாட்டின சில குட்டிகள்

   பகை கொண்டு போனவற்றை
   எண்ணித் துடித்தன சிலமனங்கள்
   பகைகொண்ட சில பூனைகள்
   பண்பற்று நடந்தன எம்மிடம்

   அவற்றை அடக்கப் போந்தால்
   நட்புப் பூனைகள் சிணுங்குகின்றன
   அமைதிப் பூனைகள் அழுகின்றன
   பகைப் பூனைகள் பாய்கின்றன!

   பகைப் பூனையை அடிப்பவன்
   பூனை யினத்துகே வைரியல்லன்
   நாடுவிளங்கச் சில கடுமைகள்
   செய்வது குற்றமல்ல என்று

   அமைதிப் பூனையும் அறியுமா
   நட்புப் பூனைக்கு புரியுமா
   புரியாது சினந்தால் பேதைமை
   புரிந்தும் தடுத்தால் வன்கொடுமை.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: