குஷிமிகு குஜராத்!

Business India ஜனவரி 9, 2011 தேதியிட்ட இதழைப் படித்துக் கொண்டிருந்த் போது “குஜராத்: வணிகத்தின் கனவு இலக்கு” என்று ஒரு கருத்தாய்வு படித்தேன். (அது பற்றிப் பிறகு சொல்வேன்) நிஜமாகவே தமிழகம் அப்படி வராதா என்ற ஏக்கம் ஏற்பட்டது.  நரேந்திர மோடி நல்லபடியாக ஆள்கிறார் என்று சொன்னாலே வடிவேலு மாதிரி “அவனா நீயி?” என்று கேட்கும் தமிழக அறிவுஜீவிகள் இதை செரிக்கத் திணறுவார்கள். ஜெயலலிதாவின் 2001-06 ஆட்சி நன்றாக இருந்தது என்று சொன்னாலே சொன்னவரையும் அவரையும் சாதி சொல்லித் திட்டும் பகுத்தறிவுப் பெட்டகங்கள், மோடியை எப்படி ஏற்பார்கள் .

கோடிகளில் கொள்ளை அடித்தவர்களையும் சாதி சொல்லிக் காப்பாற்றத் துணியும் பகுத்தறிவுப் புலிகளையே பார்த்துப் பழகிய நமக்கு இப்படி ஒரு முதல்வர் என்பது ஆச்சரியம்தான். இந்தியாவில் இப்படி ஒரு வளர்ச்சிப்பணி ஆற்றும் முதல்வர் என்பது குறித்துப் பெருமைப்பட்டாலும், தமிழகத்தில் இப்படி இல்லை என்பது பொறாமை தருகிறது. (ஜெ.  20011ல் மீண்டு(ம்) வந்து விட்டதைப் பிடிப்பார் என நம்பலாம்!)

24 மணிநேரம் மின்சாரம் இருக்கிறது. (அப்படின்னா?) விவசாயம் செழிக்கிறது. (ஓஹோ?) அது கிடக்கட்டும். கோத்ராவில் மோடி பலரைக் கொன்றார் தெரியுமா என்பர். தீஸ்தா செதல்வாட் போராடுகிறாரே தெரியுமா என்பர். அவர்கள் சில நாட்டு நடப்புகளை வசதியாக மறப்பர் அல்லது மறைப்பர்.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை கோத்ரா கலவரத்திற்கு நரேந்திர மோடி  காரணமில்லை என்று தெரிவித்திருக்கிறது.  அவர் தமது அரசியல் சாசனக் கடமைகளில் இருந்து வழுவி மக்களைக் காக்கத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு  குற்றத்தில் சிக்கவைக்கும் பொருண்மைகள் போதுமான அளவில் இல்லை என்பது சிறப்பு புலனாய்வுக் குழு கண்டு சொல்கிற உண்மை.

இதை உண்மை என்று எப்படிச் சொல்வாய்? மோடி செய்யவில்லை என்பதை நீ நேரில் பார்த்தாயா என்று கேட்போர் நிற்க.  சிறப்பு புலனாய்வுக் குழு நரேந்திர மோடியை மணிக்கணக்கில்  விசாரித்த பிறகே அறிக்கை அளித்தது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு தீர விசாரித்துச் சொன்ன செய்தியில் பொய் இருக்க வாய்ப்பே இல்லை.

தவிரவும், குஜராத் கலவரம் தொடர்பான சிறப்புப் புலனாய்வு நீதிமன்றத்தில் பல கற்பனைப் புனைவுகள் கலவர நிகழ்வுகள்  என வாக்குமூலங்களாக வரிசைகட்டி வருகின்றன. இந்த வழக்கில் தீஸ்தா செதல்வாட் ஜாவேத் என்கிற சமூக சேவகி அம்மையார் மிகவும் தீவிரமாக இறங்கி வேலை செய்கிறார். அவர் ஒரு தொண்டு நிறுவனமும் நடத்துகிறார். நன்கொடைகள் தாராளமாக வரிவிலக்கெல்லாம் காட்டி வாங்கிக் கொள்ளவும் செய்கிறார்.

அவர் செய்யும் தொண்டு பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றத்தில் நிறுத்துவோர் பெயரில் இவரே இட்டுக்கட்டிய கொடூரக் கொலைக் கதைகளைக் (cooking up macabre tales of killings) கலவர நிகழ்வுகள் என்று பிரமாண வாக்குமூலமாக சமர்ப்பிப்பது. தொண்டு நிறுவனம் என்பதால் ஏதாவது உதவி கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில், “கடையை எரிச்சுப்புட்டங்க, வீட்டைக் கொளூத்திப்புட்டாங்க, உதவி செய்யுங்கம்மா!” என்று வருவோரிடம் பேர் ஊர் முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டு,அவர்களிடம் வெற்றுத் தாட்களில் கையொப்பமும் பெற்று, “துள்ளத் துடிக்கக் கொலை செய்தார்கள், கதறக் கதற கற்பழித்தார்கள், அவர்கள் எல்லோரும் நரேந்திர மோடியின் ஆட்கள், நான் பயத்தால் பார்த்துக் கொண்டு மட்டுமிருந்தேன்” என்கிற வகையில் எழுதி நீதிமன்றத்தில் அவர்கள் பெயரில் பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்திருக்கிறார்.
(http://www.dailypioneer.com/281457/%E2%80%98Teesta-drafted-affidavits-didnt-divulge-contents.html)

பலருக்குத் தங்கள் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதே தெரியவில்லை. அப்படிக்  ‘கலவரத்தில் பாதிக்கப்பட்டோரை’ விசாரித்த போது உளறிக் கொட்டி, கடைசியில் வாக்குமூலத்தைப் பற்றி தமக்கேதும் தெரியாது என்றும் ‘அந்தம்மா’ சொன்னதைத் தான் தாங்கள் சொல்வதாகவும் கூறியுள்ளனர். என் பெயரில் எப்படி இல்லாத கதைகளைக் கட்டுவாய் என்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் இந்த சமூக சேவகி அம்மையார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தீஸ்தா அம்மையாரிடம் உதவியாளராய் வேலை பார்த்த ரயிஸ்கான் பதான் என்பவர் தமக்குத் தெரியாமல் தம் பெயரில் தீஸ்தா அம்மையார் இ-மெயில்களை அனுப்பியும் பெற்றும், தம் பெயரில் மேற்கூறிய மோசடிகளைச் செய்ததாக சிறப்புப் புலனாய்வு அதிகாரியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அறிவு ஜீவிகள் பலர் செதல்வாட் அம்மையாருடன் சேர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலரை வைத்து “கவலைகொண்ட மக்கள் தீர்ப்பாயம் (Concerned Citizens Tribunal)” ஒன்றை அமைத்து, “சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் சங்பரிவார் அமைப்பினர் குற்றமிழைத்தனர். நரேந்திர மோடி கலவரத்திற்குத் திட்டம் தீட்டி, குற்றவாளிகளுக்குத் தலைமை தாங்கினார்” என்று தீர்ப்பளித்தனர்.

இது அம்மையாரின் தொண்டு நிறுவனத்தின் சாதனைகளில் ஒன்றாக அவர்களின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது காட்சிப்பிழை என்பதும், சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்கள் செதல்வாட் அம்மையார் சமைத்துத் தந்தவை என்பது இப்போது தெரிய வருகிறது.

ஆக ஊடகங்கள் பதிவு செய்தவை உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகள் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. அறிவுஜீவிகள் அவசரப்பட்டு விட்டார்கள் என்பதுவும் புலனாகிறது. Some vested interests are striving so hard to keep the people and truth in dark என்பது ஐயம். தீஸ்தா அம்மையார் கூறும் குற்றச்சாட்டுகள் திரிபற்றவை என்று தெளிவாகும் வரை இந்த ஐயம் தொடரும்.

தற்போது நீதிமன்றத்தில் தீஸ்தா அம்மையாரால் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குறி, அடிப்படையே அடுக்கப்பட்ட பொய் எனும் போது கிட்டவோ தட்டவோ அவற்றை ஏற்பது இகழ்ச்சி.

(இது குறித்து நான் தமிழ் பேப்பர், தமிழ் ஹிந்து ஆகிய தளங்களிலலிட்ட பின்னுட்டங்களில் தட்டெழுதிய சில வாசகங்கள் அப்படியே இங்கிருக்கும். )

என் கேள்வி:

நரேந்திர மோடி குஜராத்தை 9 ஆண்டுகள் ஆண்டு மாநிலத்தின் பொருளாதார, வாழ்க்கைத்தர வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கிறார். ச்.  மத்திய அரசு எதிர்க்கட்சி, ஊடகங்கள் அவரை நிரந்தரக் குற்றவாளி என்கின்றன. இருப்பினும் மாநில மக்கள் நலன் முன்வைக்கப்பட்டு மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார் மோடி.

கருணாநிதிக்கு இந்தத் ‘தகுதி’ எதுவுமே இல்லை. மத்திய் அரசில் 12 ஆண்டுகளாகப் பங்கு வகிக்கிறார். குற்றச்சாட்டுகள் இருக்கின்றன, ஆனால் வழக்கு விசாரணை எல்லாம் மருந்துக்குக் கூடக் கிடையாது.  ஊடகங்கள் அவரை பாசம் நேசம் இவையெல்லாம் மிகுந்து போற்றுகின்றன. 50 ஆண்டுகால அரசியல் அனுப்பவம் வேறு. நிர்வாகத்தில் சூரப்புலி என்று பெயர் பெற்றிருக்கிறார்.

ஆனாலும் தமிழகம் எந்தக் கருத்தாய்விலும் முதலிடம் பெறவில்லையே ஏன்? நமக்கு நாமே திட்டம் தான் இதற்கு ஒத்துவருமோ?

Advertisements
Explore posts in the same categories: அரசியல்

Tags: , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 Comments on “குஷிமிகு குஜராத்!”


  1. உண்மையானதொரு பதிவு. இஸ்லாமியர் விவகாரத்தில் எனக்கும் மோடிக்கும் எட்டாம் பொருத்தம் என்றாலும். அண்மையில் அமெரிக்காவில் வெளியான ஒரு கட்டுரையில் வறண்ட பகுதியான குஜராத்தில் மோடியின் பல திட்டங்களால், நில அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும், பசுமை வெளிகள் அதிகரித்து வருவதையும் செயற்கைகோள் புகைப்பட விளக்கத்தோடு வெளியாகியது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அப்பா ! இந்தியாவில் ஒரு முதல்வராவது நன்றாக ஆள்கிறாரே !!! அது மட்டுமில்லாமல். இந்த ஆண்டு குஜராத்தில் இருந்து அமெரிக்கா கனடா நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான குஜராத்தில் புலம்பெயர்ந்து உள்ளனர். பல புலம்பெயர்வுகள் குஜராத் அரசின் உதவியோடு தான். இதில் என்ன லாபம் என்கிறீர்களா?

    கணிசமான அளவு மக்கள் புலம்பெயர்ந்தால், வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட மாநிலத்துக்கு பண வரத்து அதிகரிக்கும், உள்நாட்டிலும் மக்கள் தொகை குறையும் போல !!! ஆனால் குஜாராத்திகள் பல் ஆயிரம் டாலர்களை குஜாராத்துக்கு அனுப்பவதை நான் பார்த்து வியந்தேன். தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு தலைவர் இல்லாமல் போனாரே… ஜெயலலிதாவுக்கு அந்த ஆளுமை இருக்கு. ஆனா செய்வாங்களா> பொறுத்திருந்துப் பார்போமேன்


  2. அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

    தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் …

    அன்புடன்,

    வலைச்சரம் நிர்வாகம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: